முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் அவரைக் கொல்ல வந்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மோசடி செய்ததாக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அவரது அரசு கலைக்கப்பட்டது.
இவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தேர்தல் ஆணையம் அவரை தேர்தலில் போட்டியிடவும் தடை செய்துள்ளது. தனக்கு எதிரான அவதூறு பரப்புவதாகக் கூறி இம்ரான் கான் ரூ.100 கோடி கேட்டு தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வசிராபாத்தில், இம்ரானின் கட்சி சார்பில்,ஆளும் அரசை எதிர்த்து நீண்ட பேரணி நடந்தது. இந்த பேரணியில் இம்ரான்கான் கலந்து கொண்ட நிலையில் திடீரென மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதிலஇம்ரான்கான் கட்சி நிர்வாகிகள் சிலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்ரான்கான் வலது காலில் குண்டு பாய்ந்தது, இதைஅடுத்து உடனடியாக இம்ரான்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த வீடியோ வெளியான நிலையில், இம்ரான் கான் மீது தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர், அவரிடம் நடத்திய விசாரணையில், இம்ரான் கான் மக்களை தவறாக நடத்துவதால் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவரைக் கொல்லை விரும்பியதாகவும், தன்னை யாரும் தூண்டவில்லை என்று தெரிவித்துள்ளார்.