ரூ.100 கோடி கேட்டு தேர்தல் ஆணையம் மீது வழக்கு தொடரும் இம்ராகான் !

செவ்வாய், 1 நவம்பர் 2022 (21:38 IST)

நமது அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் , முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், தேஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவருமாக இருப்பவர்  இம்ரான் கான். 

இவரது ஆட்சியின் பொருளாதார  நெருக்கடி மற்றும் மோசடியில் ஈடுபட்டதை அடுத்து, இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இம்ரான் கான் தன் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கு சட்டத்திற்கு புறம்பாகப் பணம் பெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து,  இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது.

இதில்,  இம்ரான் கானின் கட்சி,  தடை செய்யப்பட்ட நாடுகளிடம் நிதிப்பெற்றதை உறுதி செய்து அவரது ஆட்சி கலைக்கப்பட்ட் நிலையில், அவரது எம்பி பதவியில் இருந்து தகுதி  நீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது தற்போது, பிரதமர் சபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வரும்  நிலையில், இம்ரான் மீதான பிடி இறுகிவருகிறது.

இந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி  தன் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிற கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து  உண்மையான சுதந்திரற்கான போராடம் என்ற பெயரில் லாகூரில் உள்ள லிபர்டி சவுக்கிலிருந்து இஸ்லாமா பாத்திற்கு பேரணியைத் தொடங்கினார்.

இதன் நான்காவது நாள் பேரணி இன்று நடந்தது. அப்போது பேசிய இம்ரான் கான்,  ‘’பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் என் மீது களங்கம் கற்பிக்க முயற்சி மேற்கொள்கிறது, எனவே தேர்தல் ஆணைய தலைவர் சிக்கந்தர் சிக்கந்தர் சில்தான் ராஜாவுக்கு ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்குப்போடப் போவதாகக்’’ கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்