அமெரிக்க தூதரகத்தில் தாலிபான் கொடி!!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (11:29 IST)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரத்தின் சுவரில் தாலிபான்களின் கொடி மற்றும் சின்னம் வரையப்பட்டுள்ளது.
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமராக முல்லா ஹஸன் அகுந்த் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைச்சரவை பட்டியலையும் தாலிபான் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் சர்வதேச பயங்கரவாதி என குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த அப்துல்கானி என்பவர் உள்துறை அமைச்சராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரத்தின் சுவரில் தாலிபான்களின் கொடி மற்றும் சின்னம் வரையப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள இடத்தை சுற்று உள்ள தெருக்களில் எல்லாம் தாலிபன்களின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்