ஜப்பான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நில நடுக்கம்

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (22:23 IST)
ஜப்பான் நாட்டில் இன்று மதியம் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஜப்பான் நாட்டில்  பிரதமர் ஃபுமியோ கிஷிடா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நாட்டின் மத்திய பகுதியில் இஷிகவா நகரின் ஹோன்ஷூ தீபகற்பத்தில் இன்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், இந்த  நிலநடுக்கத்தால், வீடுகள், கட்டிடங்கள், லேசாக குலுங்கியதாகவும், இதனால் அச்சமடைந்த மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு, வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்ததாகவும், கூறப்படுகிறது.

இந்த   நில நடுக்கத்தில் சிக்கி ஒருவர் பலியானதாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்