நாளை முதல் மீன்பிடி தடைகாலம் தொடக்கம்.. இன்றே எகிறிய மீன் விலை..!

Siva

ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (12:32 IST)
நாளை முதல் மீன்பிடி தடை காலம் தொடங்க இருப்பதை அடுத்து இன்றே மீன் மார்க்கெட்டில் மீன் விலை உச்சத்திற்கு சென்றதாக கூறப்படுவது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகளை கொண்டு கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு, மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
 
அந்த வகையில், நாளை நள்ளிரவு முதல் இந்த தடைக் காலம் தொடங்க இருப்பதை அடுத்து, 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில், மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு, இன்றைய மீன் மார்க்கெட்டுகளில் மீன்  விலை உச்சத்துக்கு சென்றுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோர் மீன் வாங்க வந்திருந்ததாகவும், ஆனால் மீன் விலை அதிகமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்