திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

Siva

ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (14:20 IST)
குமரியில் கண்ணாடி இழைப்பாலம் திறந்து சில மாதங்கள் ஆன நிலையில், தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப்பாலம் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 
 
மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று, விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வருகின்றனர்.
 
இந்த பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், ஏப்ரல் 15 முதல் 19ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 
திறந்து சில மாதங்களே ஆன  நிலையில், கண்ணாடி இழப்பாலம் பராமரிப்பு பணிக்காக தடை விதிக்கப்பட்ட அறிவிப்பு சுற்றுலா பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்