தைவானை தனி நாடாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அங்கீகரித்து வரும் நிலையில், அது தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து வாதிட்டு வருகிறது. சமீப காலமாக அமெரிக்க அரசியல் தலைவர்கள் தைவானுக்கு பயணம் செல்வதை எச்சரிக்கும் விதமாக தைவான் எல்லை பகுதிகளில் போர் ஒத்திகை, எல்லை தாண்டி போர் விமானங்கள் பறப்பது போன்ற அத்துமீறல்களை செய்து வருகிறது.
இந்நிலையில் தற்போது தைவான் நாட்டிற்கு அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பயணம் செய்துள்ளார். அமெரிக்கா – தைவான் இடையே உள்ள உறவை மேலும் பலப்படுத்த தைவானுக்கு அழைப்பு விடுத்துள்ள அவர் “தைவானுக்கு எதிராக சீனாவும், ரஷ்யாவும் படை எடுத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தைவானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுத்தால் சீனாவை நீண்ட காலத்திற்கு சர்வதேச பொருளாதார அமைப்பில் இருந்து விலக்கி வைக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.