ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி; குண்டு மழை பொழிந்த சவுதி!

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (09:05 IST)
சவுதி அரேபியா மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது.
கோப்புப்படம்

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதியின் அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில் அதிபர் மன்சூர் ஹாதியில் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டுப்படைகளும் செயல்பட்டு வருவதால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதியிலும் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சவுதி விமான நிலையம் மற்றும் பெட்ரோல் கிடங்கு மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தலைமையிடமான ஏமன் தலைநகர் சனா மீது சவுதி வான்வெளி தாக்குதலை நடத்தி குண்டுமழை பொழிந்துள்ளது. இதனால் இரு தரப்பிடையே மோதல் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்