நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!
பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்த மாசின் மன்சூர், 2024ஆம் ஆண்டின் நீட் தேர்வில் முழுமையான 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய முதல் இடத்தை பிடித்துள்ளார். 18 வயதான மாசின், மருத்துவர் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை, தாத்தா, மாமா, மாமி உள்ளிட்டோர் அனைவரும் மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்கள்.
பிறந்தது முதல் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்த மாசின், தனது குடும்ப உறுப்பினர்களை பின்பற்ற விரும்பினார். அவரது தந்தை சவுதி அரேபியாவில் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றுகிறார். மேலும், மாமா, மாமி, தாத்தா மற்றும் பெரியதாத்தா ஆகியோரும் மருத்துவர்கள்.
10ம் வகுப்பிற்கு பிறகு, மாசின் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யும் CBSE கல்வியைவிட, பீகார் பள்ளி தேர்வாய்வுத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிக்கு மாற்றம் பெற்றார். இது போட்டித் தேர்வுகளுக்கு ஏற்ற தேர்வாக CBSE கருதப்பட்டாலும், மாசின் தனது தேவைகளுக்கேற்ப துணிச்சலான முடிவை எடுத்தார்
CBSE 12ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திற்கும் அஸைன்மென்ட்கள் மற்றும் நடைமுறை தேர்வுகள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் அழுத்தம் அதிகமாக இருந்தது. அதனால் நான் BSEB-க்கு மாற்றம் செய்தேன்,” என்றார் மாசின் மன்சூர்.