பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

Mahendran

வியாழன், 22 மே 2025 (16:03 IST)
பஹால்கம் தாக்குதலுக்கு பின், இந்தியா பாகிஸ்தானை பயங்கரவாதத்துக்கு ஆதரவு வழங்குவதாக கண்டித்து, மூன்றாம் தரப்பின் வழியாக நடக்கும் அனைத்து வர்த்தகங்களையும் தடைசெய்தது. இதனையடுத்து, இந்திய அரசு அடுத்த கட்டமான கவனத்தை சீன பொருட்கள் மீது செலுத்தவிருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி, இந்தியாவில் உள்ள அதிகமான மோசமான தரமுள்ள சீன மின் சாதனங்கள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட உள்ளன.
 
இந்த புதிய நடவடிக்கையின் கீழ், சீனாவில் இருந்து வரும் மின் சாதனங்களில் சில வகைகளுக்கு இந்திய தரநிலை வாரியம் (BIS) அங்கீகாரம் இருப்பது கட்டாயமாகும். தடை விதிக்கப்பட உள்ள சீன பொருட்களில் மின் ரிக்ளைனர், படுக்கை பொருட்கள், ஸ்பா, மின்சார கழிப்பறைகள், ஆடை உலர்த்திகள், துடைப்புக் கட்டிகள், மின் அழகு சாதனங்கள் போன்றவை அடங்கும்.
 
இந்த கடுமையான நடவடிக்கை இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய மோதலில், சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததே பின்னணி என கூறப்படுகிறது.  மேலும், இந்த தடை பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய அரசாங்கம் விரும்புகிறது.
 
மற்றொரு முக்கிய அப்டேட்டில், மின்சார கார்கள் சந்தையில் சீனாவை கடந்து இந்தியா  2024-ல் 7 லட்சம் வாகனங்களுடன் உலகின் மிகப்பெரிய சந்தையாக மாறியுள்ளது. இது, சர்வதேச எரிசக்தி முகாமை  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்