'புத்தம் புதுகாலை விடியாதா' படத்தின் திரைவிமர்சனம்

திங்கள், 17 ஜனவரி 2022 (20:41 IST)
'புத்தம் புதுகாலை' என்ற ஆந்தாலஜி படத்தை முதல் கொரொனா காலத்தின் அமேசான் ரிலீஸ் செய்தது.

அதேபோல் தற்போது 'புத்தம் புதுகாலை விடியாதா' என்ற ஆந்தாலஜியை அமேசான் பிரைம் ரிலீஸ் செய்துள்ளது. இதில் மொத்தம் 5 கதைகள் உள்ளது.

இதிலுள்ள முதல் கதை, ‘முககவச முத்தம்’ – இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். இதில், 3 காவலர்கள் இணைந்து, குயிலி- முருகன் என்ற  காதல் ஜோடியை சேர்த்துவைப்பதுதான் கதை.

இரண்டாவது கதை , அலிதா ஷமீன் இயக்கியுள்ள லோனர்ஸ் ஆகும். இது அனைவருக்கும் பிடித்தமான கதை என ரசிகர்கள் கூறிவருகின்றனர். கோவிட்டால் தனிமையை தவிக்கும் நிலையை கொண்டது.  நல்லதங்காளின் உரையாடல் அருமையாகவுள்ளதாக கூறுகின்றனர். அர்ஜூன் தான் சிறப்பாக நடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது கதை, மெளனமே பார்வையாய். ஒரு கணவனுக்கும் மனைவிக்குமான சண்டையை மையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.  நதியா ஜோஜு ஜார்ஜ் நன்றாக  நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

நான்காவது கதை சூர்யா கிருஷ்ணா இயக்கியுள்ள கதை மாஸ்க், இக்கதையின் நாயகன் அர்ஜூன் ஓரின சேர்க்கையாளர் என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது கதை ரிச்சர் ஆண்டனி இயக்கியுள்ள   நிழல் தரும் இடம் ; ஐஸ்வர்யா லட்சுமி சோபி என்ற கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். மொத்தத்தில் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்