பிரான்ஸ் நாட்டில் பிரதமர் மோடி.. இமானுவேல் மேக்ரானுடன் முக்கிய ஆலோசனை..!

Siva
செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (07:21 IST)
பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறை சுற்றுப்பயணமாக சென்றுள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் நிலையில் உள்ளன.

பிரான்ஸ் நாட்டில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு செயல்பாடு உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். அவரை அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்கரான் வரவேற்றார்.

இந்த உச்சி மாநாட்டுக்குப் பின்னர், இந்திய தலைமை செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் இரு தலைவர்களும் உரையாற்ற உள்ளனர். மேலும், இந்தியாவின் புதிய துணை தூதரகத்தை இரு தலைவர்களும் திறந்து வைக்க இருப்பதாகவும், அதன் பின்னர் பிரான்ஸ் பயணத்தை முடித்து, பிரதமர் மோடி அமெரிக்கா சென்று அதிபர் ட்ரம்பை சந்திக்க இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளேன். பிரான்ஸ் அதிபர் அழைப்பின் பேரில் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று, உலகத் தலைவர்கள் மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூட்டத்தில் தலைமை தாங்க ஆவலுடன் காத்திருக்கின்றேன். கூட்டு அணுகுமுறை குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்