அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில், நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு விலங்கிடப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச இருப்பதாகவும், இது குறித்து அவர் விளக்கம் அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கை கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் குறித்து மக்களவையில் பிற்பகல் 2 மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் இது குறித்து ஆலோசனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், வெளியுறவுத்துறை மைச்சருடன் நடைபெறும் ஆலோசனைக்கு பின்னர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விளக்கம் அளிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.