பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

Siva

வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (17:00 IST)
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் AI உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும், அவர் அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் அவர்களுடன் இணைந்து தலைமை தாங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக பிப்ரவரி 10ஆம் தேதி பிரான்ஸ் செல்ல இருக்கும் நிலையில், முதல் நாள் விவிஐபி உச்சி மாநாடு இரவு விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதன் பிறகு 11ஆம் தேதி AI  உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் ஆகிய இருவரும் தலைமை தாங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், பிரான்ஸ் நாட்டின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் வட்டமேசை கூட்டம் நடைபெறும் என்றும். இதன் பின்னர், பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்தியாவின் துணை தூதரகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரு தரப்பு பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என்றும்.

அதன் பின்னர், அவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து அமெரிக்கா செல்ல இருப்பதாகவும், பிரதமரின் பயண திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரான்ஸ் பயணத்தின் போது இரு நாட்டு பாதுகாப்பு விமான பராமரிப்பு, பழுது பார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகிய முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்