இன்று தைப்பூச திருநாளை முன்னிட்டு வடலூரில் உள்ள வள்ளலார் கோயிலில் சத்திய ஞான சபையின் ஜோதி தரிசனம் நடைபெற்றது என்பதும், அதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், இன்று தைப்பூச திருநாளை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருநாளன்று வடலூரில் உள்ள வள்ளலார் கோயிலில் சத்திய ஞான சபையின் ஜோதி தரிசனம் ஏற்பாடு செய்யப்படும் என்றும், இன்று 154 ஆவது ஜோதி தரிசனத்தை ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் கண்டு களித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பழனியில் பாதயாத்திரையாக சென்ற ஏராளமான பக்தர்கள் இன்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். பழனியில் பக்தர்கள் கூட்டம் அதிகமானதை அடுத்து, சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பக்தர்களுக்கு தேவையான அன்னதானம், தண்ணீர் வசதி, கழிவறை வசதி, போக்குவரத்து வசதிகளையும் தமிழக அரசு சிறப்பாக செய்து கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.