சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்ததாகவும், இந்த சந்திப்பின்போது ஜான் ஆரோக்கியசாமி கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த தேர்தலை சந்திப்பது குறித்து பிரசாந்த் கிஷோரிடம் விஜய் ஆலோசனை கேட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜூன் தான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாகவும், அவருடைய அறிவுறுத்தலால் தான் இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் விஜய்யின் கட்சிக்காக அவர் ஆலோசகராக செயல்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில், அவர் ஜன் சுராஜ் என்ற அரசியல் கட்சியை பீகாரில் தொடங்கியுள்ளார் என்பதும், வரவிருக்கும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் அந்த கட்சி போட்டியிடப் போவது குறிப்பிடத்தக்கது.