லடாக் எல்லையில் போர் விமானம்: பதற்றத்தை கூட்டும் பாக்.!

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (15:36 IST)
லடாக் பகுதிக்கு அருகில் உள்ள சகார்டு பகுதியில் பாகிஸ்தான் போர் விமானத்தை நிறுத்தியுள்ளது எல்லையில் பதற்றத்தை கூட்டும் செயலாக உள்ளது. 
 
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா கடந்த 6 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதன் படி ஜம்மு காஷ்மீர் பகுதி சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 31 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 
 
இந்நிலையில் இதர்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் இந்தியாவுடனான போக்குவரத்து, வர்த்தகம், சினிமா என பலவற்றை தடை போட்டது. தற்போது லடாக் எல்லையில் போர் விமானங்களை நிறுத்தி வைத்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளை இந்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் இந்திய ராணுவனம் தீவிரமாக கண்காணித்தும் வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்