இதனையடுத்து 2003 ஆம் ஆண்டு ஜூலை முதல் மீண்டும் போக்குவரத்து சேவையை அறிவித்தது பாகிஸ்தான். இந்நிலையில் இந்திய அரசு காஷ்மீரின் சிறப்பு சட்டப்பிரிவை நீக்கியதால், பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் தலைமையிலான அரசு, தங்கள் நாட்டுத் தூதரை திரும்ப பெறுவதாக கூறியது. நம் நாட்டு தூதரையும் இந்தியாவுக்கு அனுப்பியது. இதனைத்தொடர்ந்து பாக்..பிரதமர் இம்ரான் தலைமையிலான அரசு, அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு கமிட்டிக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து, சம்ஜௌதா ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இதனால் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. எனவே இந்தியாவின் தில்லியிலிருந்து, பாகிஸ்தானின் லாகூர் வரியிலும், லாகூரில் இருந்து, அட்டாரி வரையிலும் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. தற்பொழுது அந்த சேவையையும் பாகிஸ்தான் அரசு நிறுத்துவதாகக் கூறியுள்ளதால், இரு நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.