மரண படுக்கையில் அதிபர் கிம்... மர்மம் உடைபடுமா...?

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (09:42 IST)
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
 
அணு ஆயுத சோதனை, அமெரிக்காவுடன் மோதல் என பரபரப்பு கூட்டி வந்தவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். தற்போது உலக நாடுகளை கொரோனா மிரட்டி வந்தாலும், எல்லைகளை முன்கூட்டியே மூடி அதை விரட்டியவர் கிம். ஆம், வடகொரியாவில் ஒரு கொரோனா பாதிப்பும் இதுவரை இல்லை. 
 
இந்நிலையில், கிம் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் செய்துக்கொண்ட அறுவை சிகிச்சை ஒன்றுக்குப் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக உளவுத்துறையை கண்காணிக்கும் அமெரிக்காவின் உயரதிகாரி தகவல் வெளியிட்டுள்ளதாக பிரபல ஆங்கில தொலைக்காட்சி நிறுவம ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
 
கடைசியாக ஏப்ரல் 11 ஆம் தேதி தான் அவர ஊடகத்திற்கு முன் காணப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. ஏப்ரல் 12 அவருக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்க கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்தியை வட கொரியாவின் முன்னாள் சிஐஏ துணை பிரிவு தலைவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்