கடலூர் ரயில் விபத்து: சுரங்க பாதைக்கு ஒப்புதல் அளிக்காத ஆட்சியர்? - தவெக விஜய் பதிவு!

Prasanth K

செவ்வாய், 8 ஜூலை 2025 (15:51 IST)

கடலூரில் ரயில் மோதி பள்ளி வேன் விபத்துள்ளான சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், அப்பகுதியில் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் “கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

 

விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி உள்ளன.

 

எனவே, விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்