சிட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி.. மாயமான தம்பதி..

Mahendran

செவ்வாய், 8 ஜூலை 2025 (16:14 IST)
கேரளாவை சேர்ந்த டோம்மி மற்றும் ஷைனி தம்பதியினர், சிட்ஸ் மற்றும் பைனான்ஸ் மோசடியில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் பண மோசடி செய்து திடீரென மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த 25 ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வந்த இந்தத் தம்பதியினர், 'ஏ அண்ட் ஏ சிட்ஸ் அண்ட் பைனான்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். தங்களிடம் முதலீடு செய்பவர்களுக்கு 20% வரை லாபம் தருவதாகக் கூறி பலரை நம்ப வைத்துள்ளனர். ஆரம்பகட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஒழுங்காக பணத்தை திருப்பி செலுத்தியதால், பலர் இந்த நிறுவனத்தில் நம்பிக்கையுடன் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளனர்.
 
ஆனால், சமீபகாலமாகப் பணத்தை திருப்பிச் செலுத்தாமல் காலம் கடத்தி வந்ததால், முதலீட்டாளர்கள் சந்தேகமடைந்தனர். இதனையடுத்து, 300-க்கும் மேற்பட்டோர் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், திடீரென இந்த தம்பதிகள் தலைமறைவாகிவிட்டனர். 
 
தம்பதிகள் தலைமறைவாவதற்கு முன்பே தங்களுடைய அசையா சொத்துக்களை விற்று பணமாக மாற்றியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தத் தம்பதிகள் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுவதால், முதலீடு செய்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்