இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் கொரியாவின் இவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஈஸ்லே, வட கொரியா தனது ராணுவ திறனைத் தொடர்ந்து வலிமைப்படுத்த விரும்புகிறது என்பதையே இது காட்டுகிறது, என்கிறார்.
மேலும் அவர், தென் கொரியாவும், அமெரிக்காவும் தங்களது ராணுவ கூட்டுப்பயிற்சியைத் தள்ளி வைத்தது கிம் அரசாங்கத்திடம் எந்த நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தவில்லை என்கிறார்.