தாயையும் மகனையும் கொன்ற தடகள வீரர் – தற்கொலை முயற்சியின் போது கைது!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (16:59 IST)
இந்தியாவைச் சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவருமான தடகள வீரர் இக்பால் சிங் தனது தாய் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு குவைத்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று ஷாட் புட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர் இந்திய தடகள வீரர் இக்பால் சிங். தற்போது அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் குடியேறி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை போலிஸாருக்கு போன் செய்து தனது தாய் மற்றும் மனைவியைக் கொலை செய்து விட்டதாக சொல்லியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைய, தன்னை தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து இப்போது கைது செய்துள்ளனர் போலிஸார். அவர் ஏன் இருவரையும் கொலை செய்தார் என்பது பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்