வடக்கு காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 93 பேர் பலி.. உலக நாடுகள் கண்டனம்.!

Siva
புதன், 30 அக்டோபர் 2024 (07:38 IST)
வடக்கு காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 93 பேர் பலியாகியுள்ளதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இஸ்ரேலுக்கும் காசாவில் உள்ள ஹமாஸ் படையினருக்கும் ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில், இந்த போரில் இரு பகுதியிலும் ஏராளமான பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு காஸாவின் வடக்கு பகுதியில் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 93 பேர் உயிரிழந்ததாகவும், உயிரிழந்தவர்களில் சிலர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது. மேலும், கட்டிட இடிபாடுகளில் 40 பேர் சிக்கியுள்ளதாகவும், அவர்களை உயிருடன் மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

தாக்குதலில் காயம் அடைந்தவர்களை அனுமதிக்க மருத்துவமனைகளில் இடமின்றி அவதிக்குள்ளாகி உள்ளதாகவும், ஏற்கனவே காயமடைந்த பலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இஸ்ரேல்-காசா போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்படுகிறது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்