என்னால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. எலான் மஸ்க் கூறிய காரணம்..!

Siva
செவ்வாய், 22 அக்டோபர் 2024 (11:39 IST)
என்னால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது, ஏனென்றால் நான் பிறந்தது ஆப்பிரிக்காவில் என்று பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்தார்.
 
அமெரிக்காவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு ஆதரவாக பிரபல தொழிலதிபர் மஸ்க் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, '2008 ஆம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா?' என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், 'என்னுடைய தாத்தா அமெரிக்கர் என்றாலும், நான் பிறந்தது ஆப்பிரிக்காவில். அதனால், என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும் எனக்கு அதிபராகும் ஆசை இல்லை. ராக்கெட் மற்றும் வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை,' என்று அவர் தெரிவித்தார்.

'எனக்கு விண்வெளி மற்றும் எலக்ட்ரானிக் வாகனங்களில் அதிக ஆர்வம் உள்ளது, அதன் மீது கவனம் செலுத்தி மக்களுக்கு தரமான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்,' என்றும் மஸ்க் கூறினார். 'நான் அரசியலில் ஈடுபட மாட்டேன், ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை எனக்கு தெரியாது,' என்றும் அவர் குறிப்பிட்டார்."


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்