அனுமதி இல்லாம எந்த கப்பல் வந்தாலும் நொறுக்கிடுங்க! – சீனா உத்தரவால் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (11:41 IST)
தென் சீன கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் சீனா அப்பகுதியில் அத்துமீறும் கப்பல்களை கண்டதும் தகர்க்க உத்தரவிட்டுள்ளது.

தென் சீன கடலின் பெரும் பிராந்தியங்கள் மீதும், தீவுகள் மீது சீனா தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலை நிறுத்த முயற்சித்து வருகிறது. சீனாவின் இந்த முயற்சிக்கு தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அவ்வப்போது அமெரிக்க போர் கப்பல்கள் தென் சீன கடலில் நுழைவதாக சீனா குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் சர்வதேச கடல் எல்லையிலேயே தாங்கள் பயணிப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது.

இந்நிலையில் சீனா ஆதிக்கத்திற்குட்பட்ட தென் சீன கடல் எல்லையில் அனுமதியின்றி நுழையும் படகுகள், கப்பல்கள் அனைத்தையும் கண்டவுடன் தகர்க்க சீனா உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல நாடுகள் பெரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்