இலங்கையை கைவிட்டதா சீனா?

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (08:42 IST)
தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இலங்கைக்கு மீண்டும் கடன் கொடுக்க சீனா தயங்குகிறது என தெரியவந்துள்ளது. 

 
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடந்த சில மாதங்களாக மக்கள் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் அரசும் ஸ்திரத்தன்மையை இழந்து வருகிறது.
 
இந்நிலையில் இந்தியாவிடம் மேலும் கடனாக 2 பில்லியன் டாலர்களை இலங்கை கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த கடனை வழங்குவது குறித்து பரிசீலித்துள்ள இந்தியா கடனை வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இலங்கைக்கு மீண்டும் கடன் கொடுக்க சீனா தயங்குகிறது என தெரியவந்துள்ளது. ஜூலையில் செலுத்த வேண்டிய கடனுக்காக இலங்கை கேட்ட ரூ.19,000 கோடி கடன் உதவிக்கு சீனா இதுவரை பதிலளிக்கவில்லை.
 
கடன் வழங்குவதில், கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச நிதி அமைப்புகளையே சீனா மிஞ்சி உள்ளது. இலங்கையும் வெளிநாட்டு கடன்களை திரும்ப செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கடந்த இரு தினங்களுக்கு முன் அறிவித்தது. இதனால் மீண்டும் கடன் கொடுக்க சீனா தயங்குகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்