இலங்கைக்கு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி கடன்! – இந்தியா முடிவு!

வியாழன், 14 ஏப்ரல் 2022 (15:25 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் மேலும் நிதியுதவி வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடந்த சில மாதங்களாக மக்கள் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் அரசும் ஸ்திரத்தன்மையை இழந்து வருகிறது.

இந்நிலையில் இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக இந்தியா நிதியுதவி அளித்து வருகிறது. நேற்று முன்தினம் இலங்கைக்கு 11 ஆயிரம் டன் அரிசியை இந்தியா வழங்கியது. சிங்கள புத்தாண்டையொட்டி கப்பலில் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவிடம் மேலும் கடனாக 2 பில்லியன் டாலர்களை இலங்கை கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த கடனை வழங்குவது குறித்து பரிசீலித்துள்ள இந்தியா கடனை வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்