ஒருத்தருக்கு கொரோனா; 3.20 லட்சம் பேர் ஊரடங்கில்..! – ஸ்ட்ரிக்டு காட்டும் சீனா!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (09:27 IST)
சீனாவில் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த நகரத்திற்கே ஊரடங்கு அறிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடான சீனா கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்கள் முன்னதாக கொரோனா பாதிப்புகள் ஓரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சீனாவின் கொரோனா பாதிப்பு தினசரி 200 – 300க்குள் இருந்து வருகிறது. இந்நிலையில் சீனாவின் வுகேங்க் நகரில் சமீபத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் ஒட்டுமொத்த நகரத்திற்கே வியாழக்கிழமை வரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது சீனா. சீனாவின் இந்த நடவடிக்கையால் அந்நகரத்தின் தொழில்கள் முடங்குவதுடன், மக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்