மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினோ பார்சோவில் குண்டு வெடித்ததில் 35 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினோ பார்சோவில் கடந்த சில காலமாக அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய அமைப்புகள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் அமைதி நிலை குலைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று தலைநகர் ஓகாடவ்கோ நோக்கி வந்த வாகனம் ஒன்றில் பயணிகள் பலர் பயணித்துள்ளனர். அப்போது திடீரென அந்த வாகனம் வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 35 பேர் பலியான நிலையில் 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பயங்கரவாத அமைப்புகளுடன் நடந்து வரும் மோதலால் அப்பகுதியில் பெரும் உணவுத்தட்டுப்பாடு எழுந்துள்ளது. சுமார் 2 மில்லியன் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.