தண்டவாளத்தில் வெடித்து சிதறிய நாட்டு வெடிக்குண்டு! – புதுச்சேரியில் அதிர்ச்சி!

வெள்ளி, 6 மே 2022 (11:15 IST)
புதுச்சேரியில் ரயில் தண்டவாள பகுதியில் நாட்டு வெடிக்குண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று நள்ளிரவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெடிசத்தம் கேட்டதை தொடர்ந்து அப்பகுதியில் குவிந்த . பொதுமக்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் வெடிக்குண்டு வெடித்த பகுதியில் நடத்திய சோதனையில் நாட்டு வெடிக்குண்டு வெடித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.

மேலும் அப்பகுதியில் சோதனை நடத்தியதில் தண்டவாளத்தின் கீழே வெடிக்காத நிலையில் மற்றொரு நாட்டு வெடிக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்