ஆப்பிள் ஐபோன் விற்பனை கடும் சரிவு.. சீனா காரணமா?

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (11:16 IST)
உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஆப்பிள் ஐபோன் விற்பனை நான்காவது காலாண்டில் மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் ஐபோன், லேப்டாப், ஐபேட் உள்ளிட்ட  பொருட்களை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக ஆப்பிள் ஐபோன்கள் ஹைடெக் பாதுகாப்பு வசதி இருக்கும் என்பதால் விஐபிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோர் ஆப்பிள் நிறுவன ஐ போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்பிள் ஐபோன்களுக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் ஜூலை முதல் செப்டம்பர் காலத்திலான காலாண்டில் 10% குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஒரே காலாண்டில் சுமார் 90 மில்லியன் டாலர் விற்பனை குறைந்துள்ளதாக தெரிகிறது.

சீனாவில் அரசு ஊழியர்கள் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்த தடை என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளாளால் தான் ஐபோன் விற்பனை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்