குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்: ஆப்பிள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்..!

வியாழன், 2 நவம்பர் 2023 (13:11 IST)
பிரபல அரசியல் கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஹேக் செய்ய முயற்சி செய்ய இருப்பதாக அவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் குறுஞ்செய்தி அனுப்பிய நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசு ஆப்பிள் நிறுவனத்திற்கு  நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 
ஆப்பிள் நிறுவனத்தை பொருத்தவரை ஆப்பிள் ஐபோன்களை எளிதில் ஹேக் செய்ய முடியாது. இதனால் தான் விஐபிகள் பெரும்பாலும் ஆப்பிள் ஐபோன்களை பயன்படுத்தி வருகின்றனர். 
 
இந்த நிலையில்  ஆப்பிள் நிறுவனம் திடீரென இந்திய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு  எச்சரிக்கை விடும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. இதனை அடுத்து மத்திய அரசுதான் எதிர்க்கட்சி தலைவர்களை வேவு பாக்க போன்களை ஹேக் செய்வதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில்  அரசு ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்டு இருப்பதாக வந்த நோட்டிபிகேஷன்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் சில எச்சரிக்கை நோட்டிபிகேஷன் தவறாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 
 
 இந்த நிலையில் இந்த எச்சரிக்கை குறுஞ்செய்தி குறித்து உடனடியாக ஆய்வு செய்து  அறிக்கை அனுப்ப ஆப்பிள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர். கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்