உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேலை நீக்கிய சீன நிறுவனங்கள்!

செவ்வாய், 31 அக்டோபர் 2023 (18:26 IST)
இஸ்ரேல் –பாலஸ்தீனம் ஆதரவு அமைப்பான ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது.

இந்தப் போரினால் இரு நாடுகள் தரப்பிலும் போர் வீரர்கள், மக்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் போருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, துருக்கி  உள்ளிட்ட உலக நாடுகள் நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஐ.நா. அமைப்பும்  இப்போரை  நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், 3 வாரங்களைக் கடந்து போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் காஸா எல்லைகளை கடந்து தரைவழியாக நுழைந்துள்ளனர். இதை இஸ்ரேல்- ஹமாஸ் போரின் 2 ஆம் கட்டம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இந்த நிலையில், சீனாவில் முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு ஆகிய நிறுவனங்கள் தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளதாகவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இதன் செயல்பாடு இருக்க வாய்ப்புள்ளாதாகக் கூறப்படுகிறது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்