என்ன வேணா நடக்கட்டும்.. சந்தோசமா இருப்பேன்! – வைரலாகும் ஆப்கன் சிறுமி புகைப்படம்!

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (13:37 IST)
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் வெளிநாடு சென்ற ஆப்கன் சிறுமியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் நாள்தோறும் வெளிநாட்டு மக்கள் மட்டுமல்லாது உள்நாட்டு மக்கள் பலருமே ஆப்கானிஸ்தானிலிருந்து பல நாடுகளுக்கு தப்பி சென்று வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து குடும்பம் ஒன்று தப்பி விமானம் மூலமாக பெல்ஜியம் சென்றடைந்துள்ளனர். அங்கு இறங்கியதும் வேறு நாட்டிற்கு வந்துவிட்ட வருத்தம் இல்லாமல் ஆப்கன் சிறுமி ஒருவர் குழந்தை தனத்தோடு துள்ளி குதித்தப்படி நடந்து சென்றுள்ள காட்சியை ராய்ட்டர்ஸ் புகைப்படக்காரர் ஒருவர் படம் பிடித்துள்ளார், தற்போது இந்த புகைப்படம் உலக அளவில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்