இந்த நிலையில், சென்னையில் ஓ.பி.எஸ் மற்றும் சீமான் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த பேச்சு வார்த்தையின் போது, இருவரும் தற்போது அரசியல் நிலவரம் குறித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
ஓ.பி.எஸ் தனிக்கட்சி தொடங்கி, வரும் தேர்தலை எதிர்கொள்வார் என்றும், அவர் சீமான் கட்சியுடன் இணைந்து கூட்டணியாக போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, "எங்கள் இருவருக்கும் இடையேயான உறவு தந்தை-மகன் உறவு போன்றது. அடிக்கடி நான் அவரை சந்திப்பது வழக்கம். அந்த அடிப்படையில்தான் தற்போது சந்தித்து உள்ளேன். இதில் அரசியல் எதுவும் இல்லை," என்றும் கூறியுள்ளார்.