பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

Siva

வியாழன், 24 ஏப்ரல் 2025 (15:12 IST)
பெஹல்காம் தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதர்கள் கேக் வெட்டி கொண்டாடியதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜம்மு-காஷ்மீர் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ள நிலையில், இதனை கண்டித்து நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் கேக் ஒன்று ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
பாகிஸ்தான் தூதரகத்திற்கு ஆன்லைன் டெலிவரி பாய் ஒருவர் கேக் கொண்டு செல்லும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. தாக்குதலை கொண்டாடுவதற்காகதான் கேக் ஆர்டர் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கேக் கொண்டு வந்த நபரை நிருபர்கள் சுற்றி வளைத்து, “யார் ஆர்டர் செய்தனர்?”, “கொண்டாட்டம் நடக்கப் போகிறதா?” எனக் கேட்டபோது, பாகிஸ்தான் தூதரக ஊழியர் மௌனமாக சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
இது இந்தியர்களின் கோபத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்