மோடி போட்ட உத்தரவு? பாகிஸ்தான் கடல்பகுதியில் நுழையும் விக்ராந்த் போர் கப்பல்? - அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

Prasanth Karthick

வியாழன், 24 ஏப்ரல் 2025 (16:27 IST)

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் கடல் எல்லை நோக்கி இந்திய கடற்படை கப்பல் சென்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இந்தியா வந்த பாகிஸ்தானியர்களை நாடு திரும்ப கெடு விதித்த இந்தியா, பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. பயங்கரவாதிகளை மண்ணோடு மண்ணாக்குவோம் என பிரதமர் மோடி ஆவேசமாக பேசியிருந்தார்.

 

பாகிஸ்தான் அரசுக்கு இந்திய அரசு கடும் அழுத்தம் கொடுத்துள்ளதுடன், இந்தியாவின் முப்படை ராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவை அச்சுறுத்தும் விதமாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனைகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியானது.

 

தற்போது எதிர்பாராத திருப்பமாக இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் பாகிஸ்தான் கடல் எல்லையை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரபிக்கடலில் தற்போது விக்ராந்த் போர் கப்பல் நுழைந்துள்ளதாகவும், தொடர்ந்து பாகிஸ்தான் நோக்கி நகர்ந்து வருவதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்