ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் பலநாட்டு மக்களும் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதற்காக காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்து வரும் நிலையில், காபூல் விமான நிலையத்தை கைக்குள் கொண்டு வந்துள்ள அமெரிக்க படைகள் மக்களை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் காபூல் விமான நிலையம் அருகே பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 170 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பயங்கரவாத கும்பல் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்நிலையில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் பயங்கரவாதிகள் காபூல் விமான நிலையத்தை தாக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார், அதை தொடர்ந்து காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.