பிரிட்டனில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி !!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (14:08 IST)
WHO ஒப்புதலுடன் உலகிலேயே முதல் முறையாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை துவங்கியது பிரிட்டன். 
 
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை இங்கிலாந்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பைசர் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. 
 
அந்த விண்ணப்பத்தையடுத்து இங்கிலாந்தில் பைசர் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அந்நாட்டு அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, இங்கிலாந்து முழுவதும் இன்று பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட உள்ளது. 
 
மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசி உலகிலேயே முதல்நபராக 90 வயது மூதாட்டியான மார்க்ரெட் கெனென் என்பவருக்கு போடப்பட்டுள்ளது. தற்போது முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 21 நாட்களுக்கு பின்னர் செலுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்