30 ரூவா டிக்கெட் 3 ஆயிரம் ரூபாயா? ஊட்டி மலை ரயில் சர்ச்சை! – ரயில்வே நடவடிக்கை!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (13:56 IST)
ஊட்டி மலை ரயில் சேவை தனியாருக்கு விற்கப்பட்டதாகவும், அதனால் டிக்கெட் விலை அதிகரித்திருப்பதாகவும் வெளியான செய்திக்கு ரயில்வே துறை விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தின் மிக பிரபலமான சுற்றுலா தளமான ஊட்டியில் மிகவும் பிரசித்தமானது ஊட்டி மலை ரயில். கொரோனாவுக்கு முன்பு வரை இந்த மலை ரயிலில் பயணிக்க ரூ.30 வசூலித்து வந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். மிகவும் குறைவான கட்டணத்தில் மலை ரயிலில் பயணிக்கலாம் என்பதால் சுற்றுலாவாசிகளின் முதல் தேர்வாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஊட்டி மலை ரயில் சேவை தனியாருக்கு விற்கப்பட்டு விட்டதாகவும், தற்போது ஊட்டி மலை ரயிலில் பயணிக்க ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்படுவதாகவும் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஊட்டி மலை ரயிலில் டிக்கெட் கட்டணம் ரூ.3,000 என ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்கள் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள ரயில்வே துறை ஊட்டி மலை ரயில் சேவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என தெரிவித்துள்ளது. சிறப்பு ரயில் சேவையாக செயல்பட்டபோது நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அது என்றும், சாதாரண சேவைக்கு இது பொருந்தாது என்றும் ரயில்வேதுறை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஸ்டிக்கர்களும் அகற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்