கொரோனா தடுப்பூசி கிடைக்குமா? கிடைக்காதா? மத்திய அரசை சாடும் காங்!

வியாழன், 3 டிசம்பர் 2020 (13:14 IST)
கரோனா தடுப்பூசி தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 35,551 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95,34,964 ஆக உள்ளது.
 
24 மணி நேரத்தில் 526 பேர் புதிதாக உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 1,38,648 ஆக உள்ளது. மேலும், 24 மணி நேரத்தில் 40,726 பேர் குணமடைந்துள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 89,73,373 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், அனைவருக்கும் கரோனா தடுப்பூசி தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அதாவது, காங். தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டில் ஒவ்வொரு இந்தியருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், பிரதமர் மோடியின் பேச்சு வெற்றுப் பேச்சு என்பதைப் போல், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கரோனா தடுப்பூசி போடத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
தனது நிலைப்பாட்டிலிருந்து அடிக்கடி மாறும் யுடர்ன் அரசாக மத்தியில் ஆளும் அரசு இருக்கிறது. இந்திய மக்கள் கரோனா தடுப்பூசி விவகாரத்தில் தெளிவான நிலைப்பாடு பெற முடியுமா. மக்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்குமா அல்லது கொடிய வைரஸிலிருந்து தப்பிக்க மக்கள் சுதேசி தயாரிப்பை நம்பி இருக்க வேண்டுமா? என பதிவிடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்