உக்ரைனுக்கு எதிரான போரியில், ரஷிய ராணுவத்தில் 2 லட்சம் பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவ போர் தொடுத்து 1 ஆண்டு நிறைவடைந்துள்ளது. ரஷியாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு உலக நாடுகள் நேட்டோ கூட்டமைப்பும், உக்ரைன் நாட்டிற்கு நிதியுதவியும், ஆயுதத் தளவாடங்களும் அளித்து உதவி வருகின்றன.
எனவே உக்ரைன் நாடு, வல்லரசான ரஷியாவுக்கு எதிராகப் போரிட்டு, பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் மூன்றாம் உலகப் போர் மூளுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷிய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 210 உக்ரைன் ராணுவத்தினர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.
மேலும், இத்தாக்குதலின்போது, துருக்கி நாடைச் சேர்ந்த கவச வானகங்கள் உள்ளிட்ட பல ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரியில், ரஷிய ராணுவத்தில் மட்டும் ரூ.2 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும், இதில், பல மது அருந்தியதாலும், வெப்ப நிலை, சாலை விபத்துகளினாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
உக்ரைன் போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தப் போரில் உக்ரைன் வெற்றி பெறும். எங்கள் நாட்டிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்போம். நீதியை மீட்டு வெற்றி பெறுவோம். என்று கூறியது குறிப்பிடத்தக்கது.