அற்புத சுவையில் பிரெட் பக்கோடா செய்ய...!

Webdunia
வழக்கமாக வெங்காய பக்கோடா தான் அதிகமாக செய்வதுண்டு. கொஞ்சம் வித்தியாசமாக, மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட, இந்த பிரெட் பக்கோடா செய்து அசத்துவோம். இந்த பிரெட் பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
 
தேவையான பொருட்கள்:
 
பிரெட் - 5 துண்டுகள்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி துண்டு - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3
சோம்பு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு ஏற்ப 
செய்முறை:
 
பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிகொள்ளவும். பிரெட்டை துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை  நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
பிரெட் துண்டுகளுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய்  ஊற்றி அது சூடானதும் பிரெட் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக பரவலாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான பிரெட் பக்கோடா தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்