வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. தடுப்பது எப்படி?

Mahendran

திங்கள், 7 ஏப்ரல் 2025 (19:03 IST)
சென்னையில் தற்போதைய சூடான காலநிலையின் காரணமாக "மெட்ராஸ்-ஐ" எனப்படும் கண் தொற்றுநோய் வேகமாகப் பரவுகிறது. நகரில் உள்ள கண் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்களில் பாதி பேர் இதே நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
 
மெட்ராஸ்-ஐ வைரஸ், குறிப்பாக அடினோ வைரசால் ஏற்படுகிறது. இவை தும்மல், இருமல், தொடுதல் மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. கண் எரிச்சல், சிவப்பு, நீர் வருதல், இமை ஒட்டல் போன்றவை முக்கிய அறிகுறிகள்.
 
இந்த நோய் தொண்டையையும் கண்களையும் தாக்கக்கூடும். பொதுவாக 10–14 நாட்களில் இயல்பாகவே குணமாகும். ஆனால், சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, கண்களில் தாய்ப்பால் போடுவது போன்ற மக்கள் வழக்குகள் தீவிர விளைவுகளை ஏற்படுத்தலாம்.
 
கூட்டம் கூடும் இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும்; முகக் கவசம் அணிதல், சுத்தமான கைகளை வைத்திருத்தல், சத்தான உணவு தின்றல் போன்றவையும் முக்கியம். பள்ளி மாணவர்களிடையே நோய் பரவல் அதிகரிப்பதால், ஆசிரியர்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். அறிகுறி தெரிந்தவுடன் சிகிச்சை பெற வேண்டும்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்