செய்முறை:
உருளைக்கிழங்கு நாலைந்து எடுத்து வேக விடவும். பச்சைப் பட்டாணியும் எடுக்கலாம். காய்ந்த பட்டாணி என்றால் ஊற வைத்து குக்கரில் கிழங்குடனேயே வைத்துவிடலாம். வெந்த கிழங்கை தோல் நீக்கி மசித்து வைக்கவும். ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு பெருங்காயம் தாளித்து பச்சை மிளகாய், இஞ்சி துண்டுகளையும் போட்டு வதக்கவும்.
வெங்காயம் விரும்பினால் ஒரு வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். சீக்கிரமே வெந்துவிடும். கொஞ்சம் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
ஒரு கப் கடலை மாவு என்றால் அரை கப் அரிசி மாவு சேர்க்கலாம். மாவுக்கு ஏற்ற உப்பு, காரத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு பின்ச் சோடா மாவு போட்டு பஜ்ஜிக்கு கலப்பது போல கலக்கவும். ஆறிய கிழங்கு மசாலாவை ஒரேயளவு உருண்டையாக அழுத்தமாக உருட்டிக்கொண்டு மாவில் தோய்த்து எண்ணெய்யில் பொரித்தால் போண்டா தயார்.