வெயில் காலத்தில் நன்மை செய்யும் வெங்காயம்.. தினமும் சாப்பிடுங்கள்..!

Mahendran

வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (18:47 IST)
மனிதர்களின் பழமையான உணவுப்பொருட்களில் ஒன்று வெங்காயம். இது சுவைக்கு மட்டுமல்ல, உடல்நலத்திற்கும் பெரும் பலனளிக்கிறது.  
 
தற்போது வெயில் காலம் தீவிரமாக இருக்கும் நிலையில் உடல் சூட்டை தணிக்க ஒரு வெங்காயத்தை நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் நம் உடலில் நீர்ச்சத்தை பாதுகாக்கலாம். குழந்தைகளுக்கு வெப்ப நோய்கள் வராமல் இருக்க, வெங்காயத்தை மோரில் கலந்து கொடுத்தாலோ அல்லது நெய்யில் வறுத்து சாப்பிடவைத்தாலோ சிறந்த பலன் கிடைக்கும்.
 
தினமும் சிறிதளவு வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு குறையும். வெங்காயத்தில் உள்ள சல்பர் எனும் சத்து, ரத்தத்தை சுத்திகரித்து மாரடைப்பைத் தடுக்கும். அதேசமயம், இதில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு தன்மை சுவாசக் குழாய்களைத் தூய்மைப்படுத்தி ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
 
மேலும், வெங்காயத்தில் உள்ள ஆன்டி-செப்டிக் தன்மை, காசநோயைத் தடுக்கும். உடலில் தேக்கமாயிருக்கும் நச்சுகளை வெளியேற்றும் திறனும் வெங்காயத்துக்கு உண்டு.
 
மூளையின் செயல் திறனை ஊக்குவிக்கவும், நினைவாற்றலை மேம்படுத்தவும் வெங்காயம் உதவுகிறது. எனவே, நம் உணவில் வெங்காயத்திற்கு முக்கிய இடம் அளிக்க வேண்டும். இது உணவல்ல, ஒரு இயற்கை மருந்து!
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்