காளான் சான்விட்ச் செய்ய வேண்டுமா...!

தேவையான பொருட்கள்:
 
காளான் - 200 கிராம்
கோதுமை பிரட் - 4
வெங்காயம் - 2
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறிதளவு
கரம் மசாலா தூள் - கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
வெண்ணைய் - 100 கிராம்
செய்முறை:
 
காளான்களைச் நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். காளான், வெங்காயம், மிளகாய், கொத்துமல்லித் தழைகளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, பூண்டை மிக்சியில் லேசாக அரைத்துக் கொள்ளவும்.
 
கடாயில் வெண்ணைய் போட்டு, லேசாக அரைத்து வைத்துள்ள வெங்காயம், பூண்டு விழுதை வதக்கிக் கொண்டு, அதனுடன் காளான், பச்சை மிளகாய், மசாலாத் தூள் போட்டு வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.
 
கிரேவியாக வந்ததும் கொத்துமல்லித் தழைகளை போட்டு இறக்கி விடவும். இந்த கிரேவியை இரண்டு கோதுமை பிரட் துண்டுகளுக்கு இடையில் வைத்து பரிமாறவும். சுவையான காளான் சான்விட்ச் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்