கோடையில் பீர் குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

Mahendran

செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (19:44 IST)
தமிழகம் முழுவதும் வெயில் வாட்டியாட, டாஸ்மாக் கடைகளிலும் பார்களிலும் பீர் விற்பனை கூடிய வேகத்தில் நடைபெற்று வருகிறது. குளிர்ச்சியை தேடி, மற்ற மதுபானங்களை விட பீரையே தேர்வாக எடுத்துக்கொள்கின்றனர். இதன் மீது மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கைகள் வழங்கியுள்ளனர்.
 
இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, “பீர் உடலுக்கு எந்த நன்மையும் தராது. ஆல்கஹால் உள்ளதால், கல்லீரல், வயிறு, கணையம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும்,” என்றார்.
 
தொடர்ந்து பீர் குடிப்பதால் நரம்புகள் பலவீனமடையும். கை, கால்களில் உணர்வு குறையும். சிலர் மதுவுக்கு அடிமையாகி ஒரே நாளும் தவிர்க்க முடியாத நிலைக்கு சென்றுவிடுகின்றனர். அதனால் வலிப்பு, பிரமை, மூளை பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
 
தினமும் பீர் குடிப்பது தீங்கு. வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு முறை அளவாக குடிப்பது மட்டும் – அதுவும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் – சிலருக்கு ஏற்கும். ஆனால் வெயிலைச் சமாளிக்க பீர் குடிப்பது என்பது தவறான எண்ணமே. பீர் குடிப்பது குளிர்ச்சியை தராது; நலத்தையும் தராது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்