இந்த ஆண்டு நோபல் பரிசு வழங்காததற்கான காரணம் என்ன?

Webdunia
சனி, 5 மே 2018 (11:22 IST)
உலகின் மிக சிறப்பு மிக்க விருதாக கருதப்படுவது நோபல் பரிசு. ஆனால், இந்த் ஆண்டும் நோபல பரிசு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நோபல பரிசு வழங்கும் தி ஸ்வீடன் அகாடெமி இந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் முதல் முறையாக நோபல் பரிசு விருதுகள் அறிவிக்கப்படாமலும், தேர்வு செய்யப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இதற்கான காரணமும் கூறப்பட்டுள்ளது. அதாவது, பாலியல் புகார்கள், நிதி மோசடிகள் காரணமாக இந்த ஆண்டு விருது வழங்குவதும், தேர்வு செய்யப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விருது வழங்கும் அமைப்பு அறிவித்துள்ளது.
 
நோபல் பரிசை தேர்வு செய்யும் 18 பேர் கொண்ட குழுவினரில், ஒருவரான ஜீன் கிளாட் அர்னால்ட் மீது 18 பாலியல் புகார்கள் எழுந்தன. இதனால், அவர் பதவி விலக கோரிக்கைகள் எழுந்தன.
 
ஆனால், அவர் மறுக்கவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர் குழுவில் உள்ள 3 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்தன. 
 
இதனால், 2018 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படாது என்றும், 2019 ஆம் ஆண்டுடன் சேர்த்து நோபல் பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நோபல் பரிசு வழங்க தொடங்கியதில் இருந்து பாலியல், நிதிமோசடி ஆகிய காரணங்களால் இதுவரை நோபல் பரிசு வழங்குவது நிறுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்